கண்களின் உள்ளே நின்றாய்
எந்தன் கண்களின் உள்ளே நின்றாய்
என் கணவினை பறித்து கொண்டாய்
உன் விழியால் வாழ்வு தந்தாய்
நெஞ்சத்தை ஏதோ சொல்லசெய்தாய்
உன் பார்வையால் காதல் நீ சொல்லவா
இயற்கை இன்று புதுமை ஆனதே
என் காதல் காற்றாய் வீசுதே
மலரும் மனதும் குழந்தை ஆனதே
தனிமை கடக்க வேண்டுதே
காதலுக்கு ஈடும் இணையும் என்றும் இங்கு கண்டதில்லை பெண் காதல் சொல்லும் இதை ஆண் அழகா
உன் கண்கள் கண்ணீர் சிந்தி என்றும் நானும் பார்த்ததில்லை புன்னகை மட்டும் இங்கு தந்திடவ
உன் கண்கள் என்னை தேட என் நெஞ்சம் உன்னை தாங்க காதலை நீ சொல்லவா
காதல் சொல்லி வருவதில்லையே மனதில் தோன்றும் இன்பமே
என் தேகம் கூட அறிவதில்லை இதையும் நேரும் துன்பமே
பார்வையால் சொல்லும் சொல்லை மாற்றி விட்டு பார்க்கும் போது பார்வையின் வலு என்ன அறிவாயா ?
பார்வைக்கும் சொற்களுக்கும் வலு இன்றி போகும் முன்பே என் காதல் தேவையை நான் சொல்லிடவா
உன் கண்கள் என்னை தேட என் நெஞ்சம் உன்னை தாங்க காதலை நீ சொல்லவா